அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் – முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின்
தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
கொரோனாவுக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
அதன்படி, தளர்வறியா உழைப்பினால் இந்திய அளவில் தமிழகத்தை எப்போதும் முதன்மை மாநிலமாக நிலை நிறுத்தி வரும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று முதல்வர் பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
தளர்வறியா உழைப்பினால் இந்திய அளவில் தமிழகத்தை எப்போதும் முதன்மை மாநிலமாக நிலைநிறுத்தி வரும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். pic.twitter.com/hpYju1CZfv
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 1, 2021
இதுபோன்று, கோரத்தாண்டவம் ஆடும் சூழலில் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிர்காக்கப் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் எனது தொழிலாளர்கள் தினம் வாழ்த்துகள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் கேடயமாகவும், போர்வாளாகவும் திமுக எப்போதும் இருக்கும் என தெரிவித்தார். புதிதாக அமையப்போகும் திமுக ஆட்சியில் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றவோம், விரோத நடவடிக்கைகளை கைவிட்டு, தொழிலாளர்களின் வாழ்கை தரம் உயர்த்திடவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
#COVIDSecondWave கோரத்தாண்டவம் ஆடும் சூழலில் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிர்காக்கப் போராடும் மருத்துவர்கள்-செவிலியர்கள்-தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் என் #LabourDay வாழ்த்துகள்!
என்றைக்கும் இச்சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது. pic.twitter.com/mMGO3AKQDp
— M.K.Stalin (@mkstalin) May 1, 2021