மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள் ..! ரூ.40-க்கு விற்பனையாகும் சின்ன வெங்காயம்..!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் காய்கறி விலை உச்சத்தை எட்டியது. அதில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.200 க்கும் , பல்லாரி வெங்காயம் விலை ரூ.150-க்கும் விற்கப்பட்டது.
வெங்காயத்தின் விலை உயர்வால் பல ஓட்டல்களில் வெங்காயம் இல்லாத சாம்பார் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் வெங்காய பதுக்களை தடுக்க வெங்காய குடோன்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதையெடுத்து வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்தது.
பின்னர் வெங்காயத்தின் வரத்து அதிகரிக்க விலை குறைந்தது.
இந்நிலையில் குமாரி மாவட்டத்தில் கிலோ ரூ.40-க்கும்,பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30, 26 என விற்பனையாகிறது.இந்த விலை குறைவு இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் வெங்காயத்தின் விளைச்சல் குறைந்து அதனால் தமிழகத்தில் விலை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.