இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி… உச்சத்தில் இருந்த தக்காளி விலை குறைவு!

tomoto price low

நாட்டில் தங்கம் விலை தினந்தோறும் உயரும், குறையும், இதுபோன்று காய்கறிகளில் வெங்காயம் விலை உயரும் என்பதை பார்த்துள்ளோம். ஆனால், இந்தாண்டு யாரும் எதிர்பாக்காத வகையில் தக்காளி விலை மளமளவென உயர்த்து இல்லத்தரசிகளை அதிச்சிக்குள்ளாக்கியது. ஏனென்றால் கடந்த வருடம் வேண்டாம் என்ற அளவுக்கு மூட்டை மூட்டையாக தக்காளிகள் தூக்கி எறியப்பட்ட சம்பவத்தை பார்த்தோம்.

ஆனால், இந்த முறை கடுமையான விலை உயர்வால், தக்காளிக்கு பஞ்சம் ஏற்பட்டது. தக்காளி வாங்குவது தங்கத்தை வாங்குவது போல் பார்க்கப்பட்டது. கடந்த மாதம் (ஜூலை) ஆரம்பத்தில் இருந்து தக்காளி விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு என்பதால் அதன் விலை கிடுகிடுவென உயரத்தொடங்கியது. இருப்பினும் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து விலை உயர்ந்து, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.

அதுமட்டுமில்லாமல், வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதில் குறிப்பாக கடுமையான விலை உயர்வு காரணமாக ஒரு மாநிலத்தில் தக்காளி விற்றே நபர் ஒருவர் ஒரு கோடி சம்பாரித்த செய்தியையும் நாம் பார்த்துள்ளோம். ஏனென்றால் அந்த வகையில் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை நிலவியது.

இதனிடையே, தக்காளி விலை உயர்வு காரணமாக, தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனையை செய்ய அரசு ஏற்பாடு செய்தது. அதுவும் ஒரு சில இடங்களில் மட்டும்தான் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றன. இதனால், தக்காளியை வாங்க முடியாத அளவுக்கு அதன் விலை எகிறியது. இதன் விலை எப்போது தான் குறையும் என இல்லத்தரசிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில், உச்சத்தில் இருந்த தாக்கல் விலை படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. அதன்படி, இன்று மொத்த விலையில் கிலோவிற்கு ரூ.40 குறைந்து ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி முதல் ரகம் ரூ.70க்கும், இரண்டாம் ரகம் ரூ.60க்கும், மூன்றாவது ரகம் ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி வரத்து அதிகரித்து உள்ளத்தால் விலை குறைந்துள்ளது என்கின்றனர். கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.50 குறைந்து ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கர்நாடகாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தக்காளி கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கோயம்பேடு சந்தையில் நாட்டு தக்காளி விலை ஒரு கிலோ ரூ.10 குறைந்து, ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று, இரண்டாம் தரம், மூன்றாம் தர தக்காளிகளின் விலையும் குறைந்துள்ளது. அதேபோல் கோயம்பேடு சந்தையில் நவீன் தக்காளி விலையும் ரூ.20 குறைந்து ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, தக்காளி விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்