மாணவர்களுக்கு ஓர் இனிய செய்தி!!மரம் வளர்த்தால் ஒவ்வொரு பாடத்திற்கும் 2 மதிப்பெண்கள்!! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது.தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் 2 மதிப்பெண்கள் வீதம் ஆறு பாடங்களுக்கு 12 மதிப்பெண்கள் வழங்கப்படும். இத்திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.