மக்கள் மனங்களைக் கவர்ந்த அன்பிற்கினிய சகோதரருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் – சீமான்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சீமான்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் அவர் தனது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வந்தார். தற்போது கொரோனா தொற்று காரணமாக தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூற யாரும் நேரில் வர வேண்டாம் என்றும், தனது பிறந்தநாளை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து கொண்டாடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து, அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எளியவர்களுக்கு உதவும் பெருங்குணத்தால் மக்கள் மனங்களைக் கவர்ந்த மூத்த திரைக்கலைஞரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான அன்பிற்கினிய சகோதரர் விஜயகாந்த் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!.’ என பதிவிட்டுள்ளார்.
எளியவர்களுக்கு உதவும் பெருங்குணத்தால் மக்கள் மனங்களைக் கவர்ந்த மூத்த திரைக்கலைஞரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான அன்பிற்கினிய சகோதரர் @iVijayakant அவர்களுக்கு எனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்! pic.twitter.com/JCEMtSOKDP
— சீமான் (@SeemanOfficial) August 25, 2021