துயர்துடைக்கும் மனம் வாய்ந்த நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – கமலஹாசன்
கேப்டன் விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவித்த கமலஹாசன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் அவர் தனது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வந்தார். தற்போது கொரோனா தொற்று காரணமாக தனக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூற யாரும் நேரில் வர வேண்டாம் என்றும், தனது பிறந்தநாளை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து கொண்டாடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், ‘எளியோருக்குப் பாதிப்பு என்றால் தன் வரம்பில் இயன்றதை அதிரடியாகவும் உடனடியாகவும் செய்து துயர்துடைக்கும் மனம் வாய்ந்த நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டள்ளார்.
எளியோருக்குப் பாதிப்பு என்றால் தன் வரம்பில் இயன்றதை அதிரடியாகவும் உடனடியாகவும் செய்து துயர்துடைக்கும் மனம் வாய்ந்த நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 25, 2021