இம்மண்ணில் விதைக்கப்பட்ட தந்தை பெரியார்.. சகோதரர் திருமாவளவனுக்கு வாழ்த்துக்கள்.. தமிழக முதல்வர் பதிவு.!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி எம்பியுமான திருமாவளவன் இன்று (ஆகஸ்ட் 17) தனது 61வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் திருமவளவனுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார். புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் @thirumaofficial அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!#INDIA #UnitedWeStand pic.twitter.com/NZx9Vk0IA7
— M.K.Stalin (@mkstalin) August 17, 2023