தமிழக அரசியலில் மறுக்க முடியாத ஆளுமை சக்தி அறிஞர் அண்ணா. தமிழகத்தை கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக மாறி மாறி ஆண்டு வரும் பிரதான திராவிட கட்சிகளின் ஆணிவேர் தான் அறிஞர் அண்ணா. இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதார இளங்கலை பட்டம் பெற்றாலும், இலக்கியத்தில் அதிக நாட்டம் காட்டினார். அதனைவிட அதிகமாக அரசியலில் நாட்டம் காட்டினார்.
முதலில் நீதிக்கட்சியில் சேர்ந்தார் பின்னர் நட்சத்திர பேச்சாளாரால உயர்ந்தார். பின்னர், பெரியாரின் அறிமுகம் கிடைத்து அவரது விசுவாசியாக மாறினார். பெரியார் நடத்திய விடுதலை, குடியரசு ஆகிய பத்திரிக்கைகளில் பணியாற்றினார். பின்னர் அதன் அனுபவங்களை வைத்து தனியாக திராவிட நாடு எனும் பத்திரிக்கையை தொடங்கினார்.
பெரியார் தலைமையிலான ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்காற்றியதற்காக 4 மாதம் சிறைவாசம் அனுபவித்தார். பின்னர் நீதிக்கட்சி திராவிடர் கலகமாக மாறியது. அதில் கருஞ்சட்டை படையை பெரியார் கொண்டுவர நினைத்தார். ஆனால் அதனை அண்ணா எதிர்த்தார். இதுதான் பெரியார் – அண்ணா இடையே முதல் விரிசல்!
பின்னர், 1947, ஆகஸ்ட் 15இல் இந்தியா சுதந்திரம் பெற்றது. அதற்க்கு பெரியார், இந்தியா ஆங்கிலேயர் கையில் இருந்து, பிராமணர்கள் கையில் கிடைத்தது எனவே இதனை திராவிடர்கள் கொண்டாட கூடாது என கூறினார். ஆனால் பொது செயலாளர் அண்ணா இந்திய சுதந்திரத்தை ஆதரித்தார். மேலும் திராவிடர்கள் கொண்டாவேண்டிய தருணம் என கூறினார். மீண்டும் பெரியார் – அண்ணா விரிசல் அதிகமானது.
பின்னர் சொத்துக்களை நிர்வகிக்க தனது செவிலியராக பணியாற்றிய மணியம்மையை வயது கடந்து திருமணம் செய்துகொண்டார் பெரியார். இது திராவிடர் கழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி, அண்ணாதுரை வெளியேறினார். இதனை அடுத்து, கனத்த இதயத்தோடு திராவிட முன்னேற்ற கழகத்தை செப்டம்பர் 17- 1949இல் அண்ணா ஆரம்பித்தார். அதில் தலைவர் பதவியை பெரியருக்காக காலியாக வைத்து விட்டு பொதுச்செயலாளர் பதவியை ஏற்றார்.
அதன் பின்னர் 1957இல் முதல் தேர்தலை எதிர்கொண்டு 15 தொகுதிகளை கைப்பற்றியது. அதன் பின்னர் தமிழ்நாட்டில், 1965ஆம் ஆண்டு ஹிந்தி மொழி ஆட்சிமொழியாக மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து மாணவர்கள், கட்சிகார்கள், பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, பெரும் போராட்டம் வெடித்தது. அப்போராட்டத்தில் பலர் தீக்குளித்தும், விஷம் அருந்தியும், தற்கொலை செய்துகொண்டனர். மேலும் பலர், துப்பாக்கி சூடு மூலம் பலர் கொல்லப்பட்டனர். அதில் பல மாணவர்களும் சுட்டுக்கொல்லப்படும்.
அதன் பிறகு நடைபெற்ற 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஆதரவு திரட்டி, அந்த தேர்தலில் முதலமைச்சர் ஆட்சி கட்டிலில் அமர்ந்தார் அறிஞர் அண்ணா. அதன் பின்னர் அவரது உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. அமெரிக்க வரை சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார் அண்ணா. ஆனால், சிகிச்சை பலனின்றி 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…