ஈரோடு கிழக்கு இடை தேர்தலுக்காக 286 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடத்தும் தேர்தல் அலுவலர் சிவகுமாரிடம் வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் ஒப்படைத்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்களையும், தங்களது நிலைப்பாட்டையும் அறிவித்த வண்ணம் இருக்கின்றனர். கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கிறது.
அரசியல் கட்சிகளைப் போல தேர்தல் அதிகாரிகளும் தேர்தலுக்கான பணிகளை முழுவீச்சில் ஆரம்பித்து உள்ளனர். ஏற்கனவே அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் வாக்கு பதிவு எந்திரங்களை கொண்டு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது அதனை தொடர்ந்து இடை தேர்தலுக்காக 286 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஈரோடு கிழக்கு இடை தேர்தல் நடத்தும் தேர்தல் அலுவலர் சிவகுமாரிடம் வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் ஒப்படைத்தார்.
தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒப்படைக்கும் நிகழ்வானது அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது. அந்த மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களானது ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு காவலர்கள் பாதுகாப்புடன் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது.
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…