கை கடிகாரம் விவகாரம்: அண்ணாமலைக்கு, செந்தில் பாலாஜி கெடு!
முடிஞ்சா அந்த ‘நபர்’ அந்த கடிகாரத்திற்கான ரசீதை இன்னைக்கு மாலைக்குள்ள வெளியிடனும் என அமைச்சர் கேடு.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கை கடிகாரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த கை கடிகாரத்தின் விலை ரூ.5 லட்சம் என்பதால் பல்வேறு கேள்விகள் அண்ணாமலையிடம் வைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கை கடிகாரம் வாங்கிய ரசீதை வெளியிட அண்ணாமலை தயங்குகிறார் என திமுக மாணவரணி தலைவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தான் வாங்கிய கை கடிகாரத்திற்கான ரசீதை இன்று மாலைக்குள் வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை வாங்கிய கை கடிகாரத்திற்கு ரசீது இருந்தால், வெளியிட வேண்டியதானே, ஏன் தயங்கணும். இதனால் முடிஞ்சா அந்த ‘நபர்’ அந்த கடிகாரத்திற்கான ரசீதை இன்னைக்கு மாலைக்குள்ள வெளியிடனும், எந்த கடையில் வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது என வங்கி விவரம் அல்லது ரசீது போன்ற விவரத்தை இன்று மாலைக்குள் வெளியிட வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், கை கடிகாரம் யார்கிட்டையோ வெகுமதி வாங்குனது, இதனால் தான் கை கடிகாரம் வாங்கிய ரசீதை அண்ணாமலையால் வெளியிட முடியவில்லை. தற்போது ரசீது தயாராகி கொண்டிருக்கிறது, என்றைக்காவது ஒருநாள் எக்செல் சீட்டில் வரும் என விமர்சித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அப்போது அதற்கான விளக்கங்களை நான் கூறுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.