14 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு..!
சென்னை புறநகர் பகுதியில் நேற்று இரவு திடீரென பல்வேறு இடங்களில் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக அடைமழை பெய்தது. இந்த மழை காரணமாக சென்னை புறநகர் கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலையில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்
இந்நிலையில், இன்னும் 2 முதல் 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.