+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது..!

இன்று துணை தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியாகவுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் நடைபெற்று வருகிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த 19-ஆம் தேதி சுமார் 8 லட்சம் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியானது.
இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தது. பின்னர், துணைத் தேர்வுக்கு பல மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், இன்று துணை தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியாகவுள்ளது. காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025