தேர்வர்களே!! குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2A முதல்நிலைத் தேர்வுக்கான 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.

Group 2 Hall Ticket

சென்னை :  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 2, குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வுகள் வரும் 14ம் தேதி நடைபெற இருக்கிறது. 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வுக்கு 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்பொழுது  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை http://tnpsc.gov.in மற்றும் http://tnpscexams.in என்ற இணைய தளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த தேர்வுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 962 தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 38 மாவட்டத்தில் 215 தாலுகா தேர்வு நடைபெறும், சென்னையில் மட்டும் 2763 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பு : இந்த தேர்வுகளில் முறைகேடில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

அதன்படி, சான்றிதழ்களில் திருத்தங்கள், சேதங்களை ஏற்படுத்துதல், போலியாக சமர்ப்பித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்