இவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் – தேர்வுத்துறை அறிவிப்பு
12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுபவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் http://dge.tn.gov.in இணையதளத்தில் நாளை பிற்பகல் முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 25-ம் தேதி 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு தொடங்கும் நிலையில், தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதனிடையே, தமிழகம், புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.