கஜா புயல் பாதித்த பகுதிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படாது…!அமைச்சர் செங்கோட்டையன்
கஜா புயல் பாதித்த பகுதிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுழன்று சூறைக்காற்றால் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் வீடுகள்,கால்நடைகள்,மனித உயிரிகளும் மற்றும் மரங்களும் பலத்த சேதமடைந்தது.சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.