அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் – அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளி எப்போது திறக்கப்படும் என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை. இதனால் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. தனியாா் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் தேர்வு பற்றி அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் ஓரிரு நாட்களில் அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், 50% பாட குறைப்பு மட்டுமின்றி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும்தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025