2023 முதல் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் – மத்திய அமைச்சருக்கு, முதல்வர் நன்றி
சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள உறுதியளித்த அளித்த மத்திய அமைச்சருக்கு முதல்வர் நன்றி.
2023ம் ஆண்டு முதல் இஸ்லாமியர்கள் சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு முதல் சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள உறுதியளித்த அளித்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் எந்த சூழ்நிலையிலும் சென்னையை ஹஜ் பயணத்திற்கான எம்பார்கேஷன் பாயிண்டாக நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இது தற்போது உறுதி செய்யபட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்தாண்டு சென்னைக்கு பதில் எர்ணாகுளத்தில் இருந்து ஹஜ் புனித யாத்திரை புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முக்தார் அப்பாஸ் கூறியுள்ளார்.
Thank you Hon’ble @naqvimukhtar for your assurance that Chennai will be considered as an Embarkation point for Haj from 2023 onwards.
I request you to make sure that Chennai will be designated as the Embarkation point for Haj in future under any circumstances. pic.twitter.com/lz0YviBOhC
— M.K.Stalin (@mkstalin) May 5, 2022