ஹஜ் பயணம்: மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு

Default Image

தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

ஹஜ் பயணம்:

hajj2023tn

தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் பயணம் (புனித யாத்திரை) மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், இந்தாண்டும் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் இஸ்லாமியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பாக தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை செய்துகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பங்கள் வரவேற்பு:

tngovt,sc

அதில், தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செல்ல விரும்பு இஸ்லாமியர்கள் மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2023-ற்காக விண்ணப்பிக்கும் முறை 10-2-2023 முதல் ஆன்லைனில் தொடங்கி 10-3-2023 அன்று முடிவடைகிறது.

 விண்ணப்பிக்கும் முறை:

hajjapplication

ஆன்லைன் விண்ணப்பத்தை www.hajcommittee.gov.in என்ற இணையதளம் வாயிலாக அல்லது “HCol” செயலியின் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். எந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உறைத்தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி கட்டாயம்:

covidvaccine14

விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். இந்த ஆண்டு, ஹஜ் பயணிகள் சென்னை புறப்பாட்டுத்தளத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம். ஹஜ் 2023-க்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்