கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.பி வசந்தகுமாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர், வசந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். பின்னர், வசந்தகுமார் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு ஆம்புலன்சில் மூலம் சென்னை தி.நகர் நடராஜன் தெருவில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பொது மக்கள் அஞ்சலிக்கு நேற்று காலை வைக்கப்பட்டது.
பின்னர், மறைந்த வசந்தகுமாரின் உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு நேற்று பிற்பகல் புறப்பட்டது. இந்நிலையில், எச்.வசந்தகுமாரின் உடல் தற்போது அவரின் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி அளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…