பொன்னமராவதியில் ஹெச்.ராஜா பரப்புரையில் ஈடுபட்டு கொண்டிருந் நிலையில் அப்போது அங்கிருந்த சிலர் பெரியார் வாழ்க என்று கோஷங்களை எழுப்பினார்கள்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் சிவகங்கை மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா.
இவர்மீது 2014ஆம் ஆண்டு பெரியார், முஸ்லீம்கள், கிருஸ்டியர்கள் என அனைவரையும் தவறாக பேசியதாக கூறி எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது. அண்மையில் கூட சென்னை உயர் நீதிமன்றம், தமிழக காவல்துறைக்கு எச்.ராஜா மீது எஃப்.ஐ.ஆர் போடுமாறு உத்தரவு பிறப்பத்திருந்தது. இரு தரப்பு மக்களிடையே பகை மூட்டும் விதமாக பேசி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்து.
திரிபுராவில் கம்யூனிஸ்ட் தலைவருள் ஒருவரான லெனின் அவர்களின் சிலையை உடைக்கப்பட்டது இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த சமயத்தில் எச்.ராஜா தனது இணையதள பக்கத்தில் , யார் அந்த லெனின்?கம்யூனிஸ்டுகளுக்கு இந்தியாவில் என்ன வேலை ? நேற்று லெனின் சிலை , நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என பதிவிட அதற்கு பல கட்சிகளும் தங்களது பலத்த எதிர்ப்பை காட்டினர். அதற்கு எச்.ராஜா தரப்பிலிருந்து, அந்த பதிவு தான் போடவில்லை தன்னுடைய அட்மின் தான் போட்டார் என கூறப்பட்டிருந்தது. இதுவும் இணையத்தில் பெரும் பேசும் பொருளாக இருந்தது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் சிவகங்கை மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிடும் நிலையில் ஹெச்.ராஜா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று பொன்னமராவதியில் ஹெச்.ராஜா பரப்புரையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த சிலர் பெரியார் வாழ்க என்று கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் பெரியார் வாழ்க வாழ்க என்று கோஷமிட்டனர். உடனே சுதாரித்த அவர் சில நொடிகள் தன்னுடைய பேச்சை நிறுத்திவிட்டார் .இதன் பின்னர் தொடர்ந்து பேசினார். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…