“வெளியே வந்த ஹெச்.ராஜா” வேடிக்கை பார்க்கும் போலீஸ்..!!

Published by
Dinasuvadu desk

இன்று ராமேஸ்வரம் வந்திருந்த ஹெச்.ராஜா  ராமேஸ்வரத்தில் உள்ள  காஞ்சி சங்கர மடத்தின் பொறுப்பாளர் சுந்தரவாத்தியார் வீட்டில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று தனது முன்னோர்களுக்குத் திதி கொடுத்த சிறப்பு பூஜைகள் செய்தார்.

புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.அப்படி அவர் பேசும்போது மதவாதத்தை தூண்டும் சில வார்த்தைகளையும் பேசினார்.

Image result for விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறைஇதனால் திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்ளிட்ட 18 பேரின் மீது வழக்கு பதிவு செய்தனர்.அவர் மீது காவல்துறை சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் என பிரிவு (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கு மறுநாள் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் விமர்சித்து பேசினார். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் ஹெச்.ராஜாவிற்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில்  புகார் அளித்துள்ளனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் இரு தினங்களுக்கு முன் உண்ணாவிரத போராட்டமும்  நடத்தினர்.

இதனால் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கைது செய்ய காவல்துறை 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட இரு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றது.பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை தலைமறைவாகிவிட்டதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அறநிலையத்துறை ஊழியர்களை விமர்சித்து பேசிய நிலையில், கோயிலுக்கு வந்த ராஜாவுக்கு எதிராக பிரச்சனை ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக 2 ஆய்வாளர்கள், 2 சார்பு ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான போலீஸார் ராஜாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் உள்ள  காஞ்சி சங்கர மடத்தின் பொறுப்பாளர் சுந்தரவாத்தியார் வீட்டில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்ற ராஜா,  தனது முன்னோர்களுக்குத் திதி கொடுத்த சிறப்பு பூஜைகள் செய்தார்.இதுவரை ஹெச்.ராஜா அருகில் கூட காவல்துறையால் செல்ல முடியவில்லை ஏன் ? என்று அணைத்து தரப்பு மக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

4 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

6 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

6 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

7 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

7 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

7 hours ago