ஹெச்.ராஜா வெற்றிபெறவில்லை என்றால்.. முதலமைச்சர் முகத்தில் முழிக்க மாட்டோம்..
- ஹெச்.ராஜா வெற்றிபெறவில்லை என்றால் முதலமைச்சர் முகத்தில் முழிக்க மாட்டோம்.
வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கான சிறப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அறிக்கையை அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் அதிமுக அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ” சிவகங்கையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை வெற்றி வைக்கவில்லை என்றால் முதலமைச்சர் முகத்தில் முழிக்க மாட்டோம் ” என்று சபதம் ஏற்றிருப்பதாக கூறியுள்ளார்.