கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் தமிழ் நாட்டில் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். அவர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பதவியேற்றவுடன் முதலில் 500 கடைகளை அடைக்க உத்தரவிட்டார். அதன் பின் அவருக்கு பின் ஓபிஎஸ்- இபிஎஸ் என முதல்வராக பதவியேற்றனர். அதன் பின் மதுவிலக்கு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தேர்தலில் மதுவிலக்கு வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு தற்போது இதுகுறித்து எந்த முடிவும் எடுத்ததைபோல் தெரியவில்லை.
மறைந்த முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாக்குறுதியை நிறைவேற்றி மதுவை முற்றிலும் ஒழித்து தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி நடக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும் என பலதரப்பிலிருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், பூரண மதுவிலக்கு என்ற முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஆசையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறினார். மது இல்லை என்பதால் யாரும் இறக்காததால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பூரண மதுவிலக்கு அமல்படுத்தலாம் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…