முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இறுதி ஆசையை நிறைவேற்றுங்கள்…. எடப்பாடிக்கு ஹெச்.ராஜா கோரிக்கை….

Default Image

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் தமிழ் நாட்டில் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். அவர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பதவியேற்றவுடன் முதலில் 500 கடைகளை அடைக்க உத்தரவிட்டார். அதன் பின் அவருக்கு பின் ஓபிஎஸ்- இபிஎஸ் என முதல்வராக பதவியேற்றனர். அதன் பின் மதுவிலக்கு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தேர்தலில் மதுவிலக்கு வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு தற்போது இதுகுறித்து எந்த முடிவும் எடுத்ததைபோல் தெரியவில்லை.

மறைந்த முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாக்குறுதியை நிறைவேற்றி  மதுவை முற்றிலும் ஒழித்து தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி நடக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும் என பலதரப்பிலிருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், பூரண  மதுவிலக்கு என்ற முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஆசையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறினார். மது இல்லை என்பதால் யாரும் இறக்காததால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பூரண மதுவிலக்கு அமல்படுத்தலாம் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

DELHI CM LIVE
Udhayanidhi stalin - Annamalai
Bangladesh vs India 2nd Match
Microsoft Majorana 1
kl rahul rishabh pant
weekemd 3 Tamil movie relase
rekha gupta cm