அவதூறு பேச்சு…!சிக்கலில் ஹெச்.ராஜா….!ஆசைப்பட்டால் ஹெச்.ராஜா கைது…!அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி அறிவிப்பு

Published by
Venu

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கைது செய்யப்படுவார் என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.அப்படி அவர் பேசும்போது மதவாதத்தை தூண்டும் சில வார்த்தைகளையும் பேசினார்.

இதனால் நேற்று திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்ளிட்ட 18 பேரின் மீது வழக்கு பதிவு செய்தனர்.அவர் மீது காவல்துறை சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் என பிரிவு (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா நீதித்துறை மற்றும் காவல் துறை குறித்து மிக மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.இதனால் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. காவல் துறையினர் மழையிலும் வெயிலிலும் தங்களது குடும்பத்தினரையும்,சொந்தங்களையும் மறந்து பொதுமக்கள் அமைதி யாக வாழ வேண்டும் என்பதற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களைப் பற்றி பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மிக மோசமாக பேசியிருப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது’ என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Related image

மேலும் ஹெச்.ராஜா கைது செய்யப்படுவாரா என்ற நிருபர்கள் கேட்டதற்கு, “உங்கள் ஆசை அதுவென்றால் நடக்கும்” எனக் கூறினார்.

இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் அமர்வு வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளது.இதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதில் ஏதாவது ஒரு நாள் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால் ஹெச்.ராஜா நீதி மன்றத்தில் ஆஜராகாத பட்சத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Venu

Recent Posts

சிறந்த நடிகை சாய் பல்லவி…சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கிய பிரபலங்கள்!

சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…

6 minutes ago

டிச 22 உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா?

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

32 minutes ago

பெண் எம்.பியை அவமதித்ததற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்! வானதி சீனிவாசன் கண்டனம்!

டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…

44 minutes ago

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

12 hours ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

14 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

14 hours ago