ஹெச்.ராஜா உருவபொம்பை எரிப்பு!
குளச்சல் : குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில்குளச்சல் நகர தி.மு.க. சார்பில் செயலாளர் நசீர் தலைமையில் எச்.ராஜா உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் நடந்தது. இதில், முன்னாள் கவுன்சிலர் சாதிக், கிளை செயலாளர் சாதிக், ரீத்தாபுரம் பேரூர் செயலாளர் கோபாலதாஸ், குருந்தன்கோடு ஒன்றிய பிரதிநிதி கிறிஸ்டோபர் ஜெகன், மாவட்ட மீனவர் அணி துணை செயலாளர் மரிய ரூபன் மற்றும் வக்கீல் முருகன், ஆல்பின், கண்ணன், சாகுல் அமீது, மனோ, ஷாஜகான், சேக் முகம்மது, நூர்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.எரிக்கப்பட்ட உருவ பொம்மையை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையிலான போலீசார் அணைத்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.