முந்திரிகொட்டையாக முந்தி வேட்பாளர்களை அறிவித்த ஹெச்.ராஜா-தூத்துக்குடியில் தமிழிசை,சிவகங்கையில் ஹெச்.ராஜா போட்டி

Default Image
  • மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • 5 தொகுதிகளில் போட்டியிடும்  வேட்பாளர்களை பட்டியலை பாஜக  இன்று வெளியிட்டது.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

மக்களவை தேர்தலை யொட்டி அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கடந்த 17-ம் தேதி வெளியிட்டது.அதேபோல் அதிமுக கூட்டணியில்  உள்ள பாஜக மட்டும் இதுவரை மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில்  உள்ள பா.ஜ.க 5 தொகுதிகள் ஒதுக்கி இருந்தனர்.தற்போது அந்த 5 தொகுதிகளில் போட்டியிடும்  வேட்பாளர்களை பட்டியலை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று தெரிவித்தார்.

Image result for தமிழிசை ஹெச்.ராஜா

ஆனால் வேட்பாளர் பட்டியலை தமிழக பாஜக தலைமை வெளியிடாமல்  தன்னிச்சையாக வெளியிட்டார் பாஜக தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா.

 

  1. கன்னியாகுமரி-பொன்.ராதாகிருஷ்ணன்(தற்போதைய மத்திய அமைச்சர்)
  2. சிவகங்கை-ஹெச்.ராஜா
  3. ராமநாதபுரம்-நயினார் நாகேந்திரன்
  4. தூத்துக்குடி-தமிழிசை சௌந்தர்ராஜன் (தற்போதைய தமிழக பாஜக தலைவர்)
  5. கோயம்புத்தூர்-சி.பி.ராதாகிருஷ்ணன்  ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29122024
Nitish kumar reddy
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi