சிவகங்கை தொகுதி.. எச். ராஜா களமிறங்குகிறார்??
- 1957 ஆம் ஆண்டிலிருந்து தேர்தலை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி ஒன்பது முறை வென்றுள்ளது.
- எச். ராஜா போட்டியிடுவார் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றன.
திராவிட கட்சிகள் எல்லாம் அலறும் தொகுதி அது என்றால் சிவகங்கை மக்களவை தொகுதி தான். காரணம் இத்தொகுதியின் வெற்றி பெற்றவர்கள் வரலாறு அப்படி.
எப்போதும் எந்தவித சந்தேகமும் இல்லாமல் கூட்டணி தொகுதி களுக்கு தள்ளி விட்டுவிட்டு, முன்னணி கட்சிகள் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும்.
இத் தொகுதியில் இதுவரை காங்கிரசு கட்சியின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. அதாவது, 1957 ஆம் ஆண்டிலிருந்து தேர்தலை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி ஒன்பது முறை வென்றுள்ளது.
திமுக மற்றும் அதிமுக தலா 2 முறை வென்றுள்ளன. இம்முறை திமுக கூட்டணியான காங்கிரசிற்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது.
அதனால் அதிமுக கூட்டணியில் பாஜக விற்க்கு இத்தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல, பாஜக விர்க்கு கொடுக்கப்பட்டது குறிப்பாக, எச். ராஜா இத்தொகுதியில் போட்டியிடுவார் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றன.