தடையை மீறி நடத்தப்பட்ட காஞ்சிபுர வேல் யாத்திரையில் இன்று கைது செய்யப்பட்ட எச்.ராஜா!

தடையை மீறி நடத்தப்பட்ட காஞ்சிபுர வேல் யாத்திரையில் இன்று எச்.ராஜா மற்றும் அவருடன் இருந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பா.ஜா.க சார்பில் தமிழகத்தில் நடத்தப்படவியருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில இடங்களில் பாஜகவினர் அத்து மீறி வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர். தடையை மீறி நடத்தப்படக்கூடிய இந்த வேல் யாத்திரையில் கலந்துகொள்பவர்களை தடுக்க போலீசாரும் தயார் நிலையில் இருக்கின்றனர்.
இந்நிலையில் எச்.ராஜா அவர்கள் தலைமையில் இன்று காஞ்சிபுரத்தில் வேல் யாத்திரை நடத்தப்பட்டுள்ளது. அங்கு அவர் உரையாற்றியுள்ளார். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் எச்.ராஜா மற்றும் அவருடன் இருந்த தொண்டர்களை கைது செய்துள்ளதாக எச்.ராஜா அவர்களே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
இன்று காஞ்சிபுரத்தில் வெற்றிவேல் யாத்திரையில் உரையாற்றிய பிறகு காவல்துறை அனைவரையும் கைது செய்துள்ளது. pic.twitter.com/iJ0IZC0vjk
— H Raja (@HRajaBJP) November 9, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025