திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை திருமயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் மேடையமைத்து பேச காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து எச்.ராஜா போலீசாரையும், நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
இதுதொடர்பாக ஹெச் ராஜா மீது திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் இந்த வழக்கில் மூன்று ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் துரைசாமி, விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதனை அடுத்து இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில் உயர்நீதிமன்றத்தில் துரைசாமி நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். இதனை அடுத்து, திருமயம் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
அதில் எச்.ராஜா தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் எச்.ராஜா முன்ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜராகியுள்ளார்.
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…
சென்னை : அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல்…