கர்ப்பிணிக்கு ஹெச். ஐ.வி ரத்தம்:பதில் தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி பாதித்த ரத்தத்தை ஊழியர்கள் செலுத்தினார்கள். கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்டக்குழு அமைக்க சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்தது.
அதேபோல் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய சாத்தூர் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சிவகாசி ரத்த வங்கி ஊழியர்கள் மீது சாத்தூர் நகர காவல் நிலையத்தில் கர்ப்பிணி அளித்த புகாரில் 2 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் ,ஆஷா அமர்வு தாமாக முன்வந்த விசாரணை செய்தது.
மேலும் நடவடிக்கை குறித்த ஜனவரி 3 ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.