தமிழகத்தில் இன்று முதல் திறக்கப்பட்ட உடற்பயிற்சி கூடங்கள்!
தமிழகத்தில் இன்று முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பள்ளிகள், கல்லூரிகள் உடற்பயிற்சிக்கூடங்கள் மற்றும் போக்குவரத்து துறை சம்மந்தப்பட்ட அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் உள்ளது.
உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்ட நிலையில் இருந்ததால் அங்கு வாடிக்கையாக சென்று வர கூடியவர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில், அரசு கொடுத்துவரும் தொடர்ச்சியான தளர்வுகளில் ஒன்றாக தற்பொழுது உடற்பயிற்சி கூடங்களை திறக்கலாம் என கூறியுள்ளது. இன்று முதல் ஜிம் மற்றும் யோகா சார்ந்த கூடங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.