திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், குட்கா விற்பனையைச் சுட்டிக்காட்ட பொட்டலங்களை சட்டசபையிலேயே காண்பித்தோம். கமிஷன் வாங்குகிறவர்கள் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள்; தடை போட்டது உயர்நீதிமன்றம். 2வது நோட்டீசும் இன்று ரத்து! இந்த வேகத்தை குட்கா தடுப்பில் அரசு காட்டியிருக்கலாமே?! குட்கா அரசின் ஆட்டம் முடியும் என பதிவிட்டுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலாகள் சந்தையில் கிடைப்பதாக கூறி அதை அரசு கவனத்திற்கு எடுத்துக்காட்ட கடந்த 2017-ம் ஆண்டு பேரவையில் திமுக உறுப்பினர்கள் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலாகளை கொண்டு சென்றனர்.
இதனால், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்கள் மீது சட்டப்பேரவை உரிமைக் குழு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ” குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் “ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
முதலில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் அடிப்படைத் தவறுகள் இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. தவறுகளை நிறுத்தி புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. பின்னர் மீண்டும் 2-வது நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சார்பில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணாபேரவை உரிமை குழுவின் 2-வது நோட்டீஸிக்கு இடைக்காலத்தடை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…