43 மூட்டை.. 7 லட்சத்திற்கு தடை செய்யப்பட்ட போதைப்பொருள்.! திருச்சியில் தீவிர வேட்டை.!
திருச்சி மாவட்டம் வளநாடு எனும் ஊரில் 7 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு தடை நீடித்து வருகிறது. அதனை விற்க தடை நீடிக்கிறது. அவ்வப்போது காவல்துறையினர் அதிரடி சோதனையில் கிலோ கணக்கில் அவற்றை பறிமுதல் செய்து கைது நடவடிக்கையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அப்படி தான் தற்போதும் ஓர் அதிரடி வேட்டை நடத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் வளநாடு எனும் ஊரில் அதிக அளவில் குட்கா பரிமாற்றம் நடைபெறுவதாக தகவல் அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில், வளநாட்டில் ஒரு வீட்டில் 43 மூட்டைகளில் குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் கணடறியப்பட்டன. இதன் மதிப்பு 7 லட்சம் என கூறப்படுகிறது. இந்த அதிரடி சோதனையின் போது ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.