பேரவை செயலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க உத்தரவு
கடந்த 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலாகள் சந்தையில் கிடைப்பதாக கூறி அதை அரசு கவனத்திற்கு எடுத்துக்காட்ட பேரவையில் திமுக உறுப்பினர்கள் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலாகளை கொண்டு சென்றனர்.
இதனால், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 19 எம்எல்ஏக்கள் மீது சட்டப்பேரவை உரிமைக் குழு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ” குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் “ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதாக திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து பேரவை செயலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…