சிறுவன் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு..! 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார்..!

புதுக்கோட்டையில், சிறுவன் மீது குண்டு பாய்ந்த விவகாரத்தில், 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு துப்பாக்கி சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இந்த பயிற்சியின்போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு இருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.
இதனையடுத்து சிறுவன் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்திக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, புதுக்கோட்டை மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
குண்டு பாய்ந்து காயமடைந்த விவகாரம் குறித்து கீரனூர் டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிறுவனின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது, வெடிப்பொருட்களை கவனக்குறைவாக கையாளுதல், காயம் ஏற்படுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025