“53 குழந்தைகள் உட்பட 135 உயிர்களுக்கு” குஜராத் கொடுத்த பரிசு – ப.சிதம்பரம் ட்வீட்
நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருக்கு பதவியில் இருக்க என்ன உரிமை இருக்கிறது? முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி.
குஜராத்தின் மோர்பி பால விபத்து தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குஜராத் உயர் நீதிமன்றத்தின் கூர்மையான கேள்விகளாலும், காரசாரமான கருத்துக்களாலும் மோர்பி தொங்கும் பாலத்தின் அனைத்து சட்ட விரோதங்களும் அம்பலமாகியுள்ளன.
ஒன்றே கால் பக்க ஒப்பந்தம், டெண்டர் இல்லை, நிபந்தனைகள் இல்லை, உறுதி சான்றிதழும் இல்லை என குற்றசாட்டியுள்ளார். எனவே, 53 குழந்தைகள் உட்பட 135 உயிர்களுக்கு குஜராத் கொடுத்த பரிசு அது.
இத்தனைக்கு பிறகும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருக்கு பதவியில் இருக்க என்ன உரிமை இருக்கிறது? நினைவில் கொள்ளுங்கள், இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை, ராஜினாமா செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
All illegalities have been exposed by the sharp questions and scathing remarks of the HC, Gujarat
One and a quarter page Agreement; no EOI; no tender; no conditions; no fitness certificate; a 10 year largesse
— P. Chidambaram (@PChidambaram_IN) November 16, 2022