குஜராத் தொங்கு பாலம் அறுந்து விபத்து – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
குஜராத் தொங்கு பாலம் அறுந்து விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
குஜராத்தில் மோர்பியில் கேபிள் பாலம் அறுந்து ஆற்றுக்குள் விழுந்துள்ளது. இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்த விபத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், குஜராத் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்த விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய விரும்புகிறேன். அதேவேளையில் விபத்தில் சிக்கி காணாமல் போனவர்களை விரைவில் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Deeply pained by the loss of so many innocent lives in the #MorbiBridgeCollapse. My heartfelt condolences to the bereaved families.
While I wish for the speedy recovery of those who have sustained injuries, the remaining people trapped must be rescued safely at the earliest.
— M.K.Stalin (@mkstalin) October 30, 2022