ஒன்றிய அரசுக்கு குஜராத்தான் கண்ணு. அந்த கண்ணுக்கு வெண்ணெய். தமிழ்நாட்டிற்கு சுண்ணாம்பு என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை நிதி ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 33 மாநிலங்களுக்கு 2754.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குஜராத். – ரூ 608.37 கோடியும், உ. பி – ரூ 503.02 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒன்றிய அரசுக்கு குஜராத்தான் கண்ணு. அந்த கண்ணுக்கு வெண்ணெய். தமிழ்நாட்டிற்கு சுண்ணாம்பு. குஜராத். – ரூ 608.37 கோடி உ. பி – ரூ 503.02 கோடி தமிழ்நாடு – ரூ 33 கோடி மொத்த ஒதுக்கீட்டில் குஜராத்துக்கு 23%, உ. பி க்கு 18%, தமிழ்நாட்டிற்கோ 1 %’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…