விதி மீறிய கட்டடம்.? குஜராத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 8 தொழிலாளர்கள் பலி.!
குராஜாத், அகமதாபாத்தில் நடந்த லிப்ட் விபத்தில் 8 பேர் பலியாகிவிட்டனர். இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பற்ற முறையில் கட்டடம் கட்டுவது, அதனால் சில சமயம் ஏற்படும் விபத்துக்கள், இதனை தவிர்ப்பதற்கு கட்டடம் கட்டுவதற்கு கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.
ஆனால் அதனையும் மீறி சில சமயம் விபத்துகள் ஏற்பட்டு விடுகிறது. அதன் பின்னர் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்க ஆரம்பிக்கிறது.
அப்படி தான் குஜராத், அகமதாபாத் அருகே ஒரு பல்கலைக்கழகம் அருகே அஸ்பயர்-2 எனும் பெயரில் அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வந்தது. அப்போது 7வது மாடியில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 8 தொழிலாளர்கள் உயிரிழந்துவிட்டனர். என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து , இந்த கட்டடம் விதி மீறி கட்டப்பட்டதா? பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது.