கடலூரில்,ஜெயக்குமார் என்ற இளைஞர் ஒருவர் மெல்லிய செம்பு கம்பியில் திருக்குறளை வடிவமைத்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
கடலூர் மாவட்டத்தின் கூத்தாப்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்ற இளைஞர் தனது 3 ஆம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்டார்.அதன் பின்பு,சிறு வயதிலிருந்தே சிறிய கம்பிகளைக் கொண்டு தான் விரும்பிய வடிவத்தினை செய்து வந்தார்.
நாளடைவில் செம்பு கம்பியைக் கொண்டு கீ செயின்,டாலர்,பெயர்கள் போன்ற பல்வேறு பொருள்களை செய்து வந்தார்.இதனைத் தொடர்ந்து, தனது தீராத கலையின் ஆர்வத்தினால் இரண்டடி கொண்ட திருக்குறளை,எந்த வித இணைப்பும் இல்லாத ஒரே செம்பு கம்பியில் வடிவமைத்து சாதனைப் புரிந்துள்ளார்.
மேலும் ஜெயக்குமார்,திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் செம்பு கம்பியில் வடிவமைத்து கின்னஸ் சாதனை செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.ஜெயக்குமாரின் இத்தகைய முயற்சியை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…