தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்..!

Published by
கெளதம்

தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலின் மண்டல விளக்கு பூஜையினையொட்டி நவம்பர் 15 ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டு 16 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதன் பின் டிசம்பர் 27 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.அவை பின்வருமாறு..

1. கேரள காவல் துறையின் மெய்நிகர் இணைய வழியான ( Virtual Que Portal) https://sabarimalaonline.org என்பதில் சபரிமலை செல்லும் தமிழக பக்தர்கள் பதிவு செய்ய வேண்டும்.

2. முதலில் வருபவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.அதன்படி நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்களும், வார இறுதி நாட்களில் 2 ஆயிரத்து 500 பக்தர்களும் அனுமதிக்கபடும்.

3. தரிசனத்திற்கு முன்புள்ள 48 மணிநேரத்திற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னர், தொற்று இல்லை என்ற கொரோனா எதிர்மறை சான்றிதழ் உள்ள பக்தர்கள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சுயவிருப்பத்தின் பேரில் கட்டணத்தின் அடிப்படையில் நோய் எதிர்ப்பு சக்தி சோதனையை பக்தர்கள் பரிசோதனை செய்து கொள்ள நுழைவு இடங்களில் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அந்த ஏற்பாட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

4. 10 வயதுக்கு குறைவானவர்கள், 60-65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

5. சபரிமலை யாத்திரையின் போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான அடையாள அட்டை, ஆயுஸ்மான் பாரத் அடையாள அட்டை போன்றவற்றை உடன் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

6. பக்தர்கள் நெய் அபிஷேகம், பம்பை ஆற்றில் நீராடல் மற்றும் இரவு நேரங்களில் சன்னிதானம், பம்பை மற்றும் கணபதி திருக்கோயில் ஆகிய இடங்களில் தங்குவதற்கு அனுமதி இல்லை.

7. பக்தர்கள் எருமேலி மற்றும் வடசேரிக்கரை வழியாக மட்டுமே‌ சபரிமலை யாத்திரை மேற்கொள்ள வேண்டும் .

Published by
கெளதம்

Recent Posts

இன்று என்ன நாள் தெரியுமா? அண்ணா குறித்து நினைவுகளை பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இன்று என்ன நாள் தெரியுமா? அண்ணா குறித்து நினைவுகளை பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : 1967 ஆம் ஆண்டு தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு திருப்புமுனை நாளாக மாறியது. ஏனென்றால்,…

31 minutes ago

Live : முதலமைச்சரின் இந்தி திணிப்பு கண்டனம் முதல்.., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : நேற்று தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடத்திய பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இந்தி திணிப்பு…

2 hours ago

“இது தான் விதி”…திடீரென ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம்!

வங்கதேசம் :  அணியின் மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டர் முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2006…

2 hours ago

அனாவசியமான கேள்விகளை கேட்காதீர்கள்! ஏர்போர்ட்டில் கடிந்து கொண்ட இளையராஜா!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்படுகிறார். அங்கு ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு…

2 hours ago

தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்., மொழியால் பிரிந்த நாடுகள் இங்கு இருக்கிறது! மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி மொழி திணிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை…

4 hours ago

“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதியில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளும்போது…

4 hours ago