ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளே… இன்று மாலை முக்கிய அப்டேட்.!

Ooty Kodaikanal E Pass

EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து வருவதால் , தற்போது ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலாவாசிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. மாணவர்களுக்கு கோடை விருமுறையும் ஆரம்பித்து விட்டதால் மேற்கண்ட சுற்றுலா தளங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் கடும் முயற்சி செய்து வருகின்றனர். ஊட்டியில் மட்டும் தினசரி சராசரியாக 20 ஆயிரம் வாகனங்கள் (வேன், பஸ், கார், பைக்) வந்து செல்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இப்படியான சூழலில் மக்கள் அதிகமாக கூடுவதால் அங்கு சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யபட்டன. அண்மையில் நடைபெற்ற விசாரணையில் முக்கிய உத்தரவை தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டனர்.

கொரோனா காலத்தில் வாகன கட்டுப்பாட்டிற்கு பின்பற்றப்பட்ட இபாஸ் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும். இதற்கான வழிமுறையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும், மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரையில் இந்த இ பாஸ் நடைமுறை அமலில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை அடுத்து இன்று மாலை இபாஸ் நடைமுறை வழிமுறைகளை இன்று தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை பிரேதயேகமாக வெளியிட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அதில், எந்த வகை வாகனங்கள் உள்ளே செல்ல உள்ளது. அதில் எத்தனை பேர் பயணிக்க உள்ளனர். எத்தனை நாட்கள் தங்க உள்ளனர். எங்கு தங்க உள்ளனர். உள்ளூர்வாசிகளுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன.? உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அந்த இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
ed chennai high court
Nainar Nagendran and cm
mumbai indians rohit sharma
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar