குட்கா லஞ்ச வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா 2-ம் நாளாக ஆஜர் …!

Published by
Venu

குட்கா  வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா 2-ம் நாளாக ஆஜராகியுள்ளனர்.
குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.அதேபோல் குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் டிசம்பர் 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது.
பின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்.
ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் இறுதிகெடுவாக சரவணனுக்கு சம்மன் அனுப்பியது சிபிஐ.ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகாமல் இருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் நேற்று ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியது.குட்கா வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து சிபிஐ நடவடிக்கை எடுத்தது.
Image result for குட்கா  அமைச்சர் விஜயபாஸ்கர் ரமணா
நேற்று காலை குட்கா முறைகேடு குறித்த விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.சம்மனை தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார் முன்னாள் அமைச்சர் ரமணா.சுமார் 9 மணி நேரமாக விசாரணை நடைப்பெற்றது. 9 மணி நேர சிபிஐ விசாரணைக்குப்பின் முன்னாள் அமைச்சர் ரமணா புறப்பட்டார்.அதேபோல்  அமைச்சர் விஜயபாஸ்கர் மீது 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
அதேபோல் குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரமணா இன்று மீண்டும் ஆஜராக சிபிஐ உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் குட்கா  வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர்  ரமணா 2-ம் நாளாக ஆஜராகியுள்ளனர்.

Published by
Venu

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

7 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

7 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

7 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

7 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

8 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

8 hours ago