குட்கா முறைகேடு …! கைதான 5 பேரின் நீதிமன்ற காவல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை நீட்டிப்பு….!

Default Image

குட்கா முறைகேடு வழக்கில் கைதான 5 பேரின் நீதிமன்ற காவல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குட்கா முறைகேடு வழக்கில் கைதான மாதவராவ், சீனிவாசராவ் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்