மயங்கி விழுந்த தொழிலாளியை மீட்ட காவலர்! குவியும் பாராட்டுக்கள்!

Default Image

காவலர் சரவணன் பைக்கில் இருந்து விழுந்து மங்கிய தொழிலாளி ஒருவரை மீட்டு, அந்த தொழிலாளியை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளார். 

இன்று மக்களை காக்கும் பணியில், காவல்துறையினர் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதில், சில காவலர்கள், மக்களிடம் கோபமாகவோ, அல்லது அதிகாரத்தை பயன்படுத்தி ஆணவத்துடனோ நடந்து கொள்வதுண்டு. அவர்களையும் தானடி மானிதாபிமானதுடன் பனி செய்யம் காவலர்களும் உள்ளார்கள் என்பதற்கு இவர்களை போன்ற காவலர்களே எடுத்துக்காட்டாக உள்ளனர். 

மணப்பாறையில், போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றி வருபவர் சரவணன். இவர் தனது பணியை முடித்து சென்றுக் கொண்டிருக்கும் போது, வழியில், பைக்கில் இருந்து விழுந்து மங்கிய தொழிலாளி ஒருவரை மீட்டு, அந்த தொழிலாளியை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளார். 

மேலும் அவர் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தையும் பத்திரமாக ஒப்படைத்துள்ளார். இவரது இந்த செயலால் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்