குரூப்-2 தேர்வுக்கு எங்களையும் அனுமதியுங்கள்……..அரசின் பதில் என்ன…?? உயர்நீதிமன்றம் கேள்வி…???

Default Image

குரூப்-2 தேர்வுகளுக்கு கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களையும் அனுமதிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், தேர்வாணையத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப்-2 பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.
Related image

இந்நிலையில் அதில், பட்டபடிப்பு முடித்தவர்கள் மட்டுமே தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து, சென்னை சூளைமேட்டை சேர்ந்த இளையபெருமாள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
Image result for தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
அந்த வழக்கு என்னவென்றால் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப்1 தேர்வுகளுக்கும் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்கள் அனுமதிக்கப்படும் பொழுது குருப்-2 தேர்வுக்கு பட்டபடிப்பு முடித்தவர்கள் மட்டுமே பங்குபெற்று தேர்வு எழுதமுடியும் என தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பானை தவறு எனக் கூறப்பட்டுள்ளது.
Image result for college students TAMILNADU

இந்த வழக்கு  நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணிய பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த நீதிபதிகள், இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்களும் குருப்-2 தேர்வில் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்குக்கு வரும் 23-ம் தேதிக்குள் பதில் அளிக்கும் படி தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்