BREAKING :குரூப் 4 தேர்வு முறைகேடு மேலும் 3 பேர் கைது..!
- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்த 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத தடை விதித்தது .
- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த முறைகேடு வழக்கில் 12 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 39 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என தெரியவந்தது.இதைத் தொடர்ந்து மற்ற தேர்வர்கள் கொடுத்த புகாரின் பேரில் டிஎன்பிஎஸ்சி விசாரணை நடத்தியது.
தேர்வாணையம் நடத்திய விசாரணையில் 99 பேருக்கு இடைத்தரகர்களின் பெயரிலே கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு செய்ததாகவும் , இடைத் தரகர்களிடமிருந்து பெற்ற சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையிலான பேனாவினால் விடைகளை எழுதி வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத டிஎன்பிஎஸ்சி தடை விதித்தது.பின்னர் சிபிசிஐடி போலீசார் மூன்று தனிப்படை அமைத்து குரூப் 4 முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர்.ஏற்கனவே இந்த முறைகேடு வழக்கில் 9 கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது வரை குரூப் 4 தேர்வு முறைகேடு 12 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர்.