கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் தேர்வு நடைபெற்றது.இந்த தேர்விற்கான தரவரிசை பட்டியலை கடந்த நவம்பர் 25 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 39 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என தெரியவந்தது.இதைத் தொடர்ந்து மற்ற தேர்வர்கள் கொடுத்த புகாரின் பேரில் டிஎன்பிஎஸ்சி விசாரணை நடத்தியது. தேர்வாணையம் நடத்திய விசாரணையில் 99 பேருக்கு இடைத்தரகர்களின் பெயரிலே கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு செய்ததாகவும் , இடைத்தரகர்களிடமிருந்து பெற்ற சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையிலான பேனாவினால் விடைகளை எழுதி வந்ததும் தெரியவந்தது.
எனவே சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து ,வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத கூடாது என டிஎன்பிஎஸ்சி தடை விதித்தது. இதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக 99 தேர்வர்கள், இடைத்தரகர்கள் மீது கூட்டுசதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சிபிசிஐடி போலீசார் மூன்று தனிப்படை அமைத்து 2 வட்டாட்சியர்கள் , டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் என உட்பட 12 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.டிபிஐயில் ஆவண கிளர்க்காக பணிபுரிந்து வரும் ஓம்காந்தன் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.விடைத் தாள்களை வேனில் கொண்டு செல்லும் வழியில் சாப்பிடுவதற்காக வேன் நிறுத்தப்பட்டபோது ,அதை மாற்றி முறைகேட்டிற்கு உதவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எழும்பூரில் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து இவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…