குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை விதிக்கப்பட்டு உள்ளது.இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இடைத்தரகர்கள் , அரசு ஊழியர்கள் என இதுவரை 14 பேர் கைது செய்து உள்ளனர்.மேலும் இந்த முறைகேட்டில் இன்னும் யார் யார் உள்ளார்கள் என தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்ததாக கூறி புகார் எழுந்தது.அந்த புகாரில் சிவகங்கை மாவட்டம் காவலர் சித்தாண்டி இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாரணை தொடங்கிய சிபிசிஐடி போலீசார் சித்தாண்டி ஒரு மாத விடுமுறை எடுத்துக்கொண்டு சென்றதாகவும் ,தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாகவும் அவரை தீவிரமாக தேடி வருவதாக சிபிசிஐடி அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்நிலையில் சென்னையில் இருந்து சிவகங்கை மாவட்டம் சென்ற சிபிசிஐடி தனிப்படை போலீசார் காரைக்குடி முத்துப்பட்டணத்தில் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலை செய்த உதவியாளர் வேல்முருகன் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
வேல்முருகன், காவலர் சித்தாண்டியின் தம்பி இவர் குரூப்-2 தேர்வில் மாநில அளவில் 3-வது இடம்பிடித்து காரைக்குடி இணை சார்பதிவாளர் அலுவலகத்தில்கடந்த 2018-ம் ஆண்டு சேர்ந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் தலைமைக் காவலர் சித்தாண்டி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…